/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறுவடையை நெருங்கும் சூரியகாந்தி பூக்கள்
/
அறுவடையை நெருங்கும் சூரியகாந்தி பூக்கள்
ADDED : ஜன 17, 2026 06:03 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி பூக்கள் அறுவடையை நெருங்கி உள்ள அதே நேரம் கொள்முதல் விலையும் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் அதிகம் விளைவிக்கப் படுகின்றன. நீர் பற்றாக் குறையை காரணம் காட்டி எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களின் சாகுபடியும் நடக்கிறது. அருப்புக்கோட்டை பாலவ நத்தம், மெட்டுக்குண்டு, விருதுநகர் அருகே கோல்வார்பட்டி என பல்வேறு பகுதகிளில் சூரியகாந்தி பூக்கள் பயிரிட்டு வளர்க்கப்படுகின்றன.
மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களான சூரியகாந்திக்கும், எள் பயிருக்கும் 2025-26ல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விவ சாயிகள் விளைச்சலிட ஆர்வமாக இருந்தனர்.
அதன் விளைவாக செப். மாதம் நடப்பட்ட சூரியகாந்தி செடிகள் தற்போது பூத்துக் குலுங்கு கின்றன. பிப். மாதம் அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், இதில் பலர் புகைப்படங்களை எடுத்து செல்கின்றன.
செலவு குறைவு என் பதாலும், பராமரிப்பு அதிகம் தேவையில்லை என்பதாலும், பல விவ சாயிகள் சூரியகாந்தி பூவை பயிரிடுகின்றனர். குவிண்டால் ரூ.6000 முதல் ரூ.6300 வரை விற்பனையாகிறது. சில வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல் கின்றனர்.

