ADDED : அக் 28, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தி, பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் நுாறு சதவீத மானியத்தில் ரூ.45 லட்சத்தில் 15 மெ.டன் தீவனப்புல் விதைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
1820 பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொண்டனர். இந்த தீவனப்புல் வறட்சியை எதிர்த்து, வளம் குறைந்த மண்ணிலும் விரைவான வளர்ச்சி அதிக உயிரி குவிப்பு , உலர் பொருள் உள்ளடக்கத்துடன் நன்கு வளரக்கூடியது. ஒரு முறை விதைத்து ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம் என தெரிவித்தனர். பால்வள துணைப்பதிவாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

