/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அளவீடு பணி துவக்கம்
/
காரியாபட்டி பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அளவீடு பணி துவக்கம்
காரியாபட்டி பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அளவீடு பணி துவக்கம்
காரியாபட்டி பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அளவீடு பணி துவக்கம்
ADDED : ஜன 24, 2025 04:13 AM

காரியாபட்டி: mகாரியாபட்டி பிசிண்டி அருகே குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பதாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, அளவீடு பணிகளை அதிகாரிகள் துவக்கினர்.
காரியாபட்டி பகுதியில் உள்ள கே. கரிசல்குளம், வக்கணாங்குண்டு, அல்லிக்குளம், சித்துமூன்றடைப்பு, கழுவனச்சேரி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு போதிய நீர் வரத்து இல்லாததால் கண்மாய் வறண்டு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.
பிசிண்டி அருகே குண்டாறில் வீணாகும் தண்ணீரை தடுத்து, தடுப்பணை கட்டி, நீர் வரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஏற்கனவே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அப்பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து, வக்கணாங்குண்டு கண்மாய்க்கு இளைஞர்கள் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்நிலையில் தடுப்பணை கட்ட வேண்டி நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. அதிகாரிகள் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்து அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காமல் பாரா முகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
அதிகாரிகள் இத்திட்டத்தை கிடப்பில் போடாமல் தீவிர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக உடனடியாக குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, அளவீடு பணிகளை அதிகாரிகள் துவக்கினர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

