
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் தென் தமிழ்நாடு சேவா பாரதி, கிரீடா பாரதி அமைப்புகளின் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சூரிய நமஸ்கார் போட்டி நடந்தது.
ஆர்.எஸ்.எஸ். மாநில கிரக பஞ்சாயத்து நிர்வாகி இருளப்பன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சி அமைப்பாளர் மாரிச்சாமி முன்னிலை வகித்தார். சேவா பாரதி ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ட தலைவர் ஜோதி குமார், ஆர்.எஸ்.எஸ். கண்ட சேவா நிர்வாகி சங்கரலிங்கம் வரவேற்றனர். ஹிந்து முன்னணி மாநில பொறுப்பாளர் பொன்னையா, போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்.
இதில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 190க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். பெற்றோர்கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பங்கேற்றனர்.