ADDED : ஜன 13, 2026 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சேவா பாரதி , கிரீடபாரதி சார்பில் சுவாமி விவேகானந்தர் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சூரிய நமஸ்கார் போட்டி நடந்தது.
கிரிடா பாரதி தென் தமிழ்நாடு மாநில தலைவர் திருமாறன் ஜி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாரிச்சாமி, ஜோதி குமார், சங்கரலிங்கம், மங்காபுரம் உறவின்முறை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மூன்று நிலைகளாக நடந்த போட்டியில் 325 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு புலவர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். விழாவில் அமைப்பு நிர்வாகிகள், பெற்றோர்கள், யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

