/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல், பேட்மிட்டன் போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல், பேட்மிட்டன் போட்டி
கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல், பேட்மிட்டன் போட்டி
கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல், பேட்மிட்டன் போட்டி
ADDED : செப் 29, 2024 06:09 AM

ராஜபாளையம், : ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் மதுரை காமராஜர் பல்கலை டி மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான நீச்சல், பால் பேட்மிட்டன் போட்டிகள் நடந்தது.
விருதுநகர், சிவகாசி, திருமங்கலம், சாத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 கல்லுாரிகளில் இருந்து 220 மாணவர்கள் கலந்து கொண்டனர். பால் பேட்மிட்டன் இறுதிப் போட்டியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியை வென்று ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது.
நீச்சல் போட்டிகளில் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் விருதுநகர் செந்தில் குமார் நாடார் கல்லுாரி முதல் இடத்தையும், முறையே ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ராமகிருஷ்ணன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் பரிசு வழங்கினர். உடற்கல்வி பேராசிரியர் அபிநயா நன்றி கூறினார்.