/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்
ADDED : மார் 27, 2025 05:57 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக பயிற்சி வகுப்புகள் இளைஞர்கள், மக்கள் அனைவருக்கும் (இருபாலருக்கும்) நடத்தப்பட உள்ளது.
நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பள்ளி, கல்லுாரி, மாணவர்கள், மக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். முதல் தொகுப்பு பயிற்சிகள் ஏப். 1 முதல் 13 வரை, 2ம் தொகுப்பு ஏப். 15 முதல் 27 வரை, 3ம் தொகுப்பு ஏப். 29முதல் மே 11 வரை, நான்காம் தொகுப்பு மே 13 முதல் 25 வரை, ஐந்தாம் தொகுப்பு மே 27 முதல் ஜூன் 8 வரை வகுப்புகள் நடக்கும்.
விவரங்களுக்கு 97513 93412 என்ற நீச்சல் பயிற்றுநரை அலைபேசி எண்ணில் அழைக்கலாம், என்றார்.