/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதி மீறி இயங்கிய பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் ரத்து செய்ய தாசில்தார் பரிந்துரை

ADDED : மார் 14, 2024 03:01 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் விதியை மீறி செயல்பட்ட 4 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான வருவாய்த்துறையினர் பட்டாசு ஆலைகளில் விதிமீறல் குறித்து சோதனை நடத்தினர். இதில் சிவகாசி அருகே மீனம்பட்டியில் இளங்கோவனுக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாக ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு பணி உள்ளிட்ட விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
புதுக்கோட்டையில் கலைமகளுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதும் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு நடைபெறுவது உள்ளிட்ட விதிமுறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மங்களம் கிராமத்தில் சோலை அம்மாள் என்பவருக்கு சொந்தமான டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு பணி நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் வட்டம் குன்னூரில் குமார் என்பவரின் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு பணி நடந்தது.
இதனைத் தொடர்ந்து தனி தாசில்தார் திருப்பதி விதிமீறல் நடந்த 4 பட்டாசு ஆலைகளுக்கும் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.