/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாசில்தார் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேட்டி

ADDED : பிப் 13, 2024 05:09 AM
ஸ்ரீவில்லிபுத்தூர : ''வருவாய்த் துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு தாசில்தார் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு உள்ளதாலும், பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாலும் தமிழகத்தில் தாசில்தார் சங்கத்தினர் ரொம்ப சந்தோசமாக உள்ளனர்,''என வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தாலுகா அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசாங்கத்தில் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைப்பதும், உண்ணாவிரத போராட்டம் நடத்துவதும் உண்டு. அத்தகைய கோரிக்கைகளை தற்போதைய முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்து வருகிறார். வருவாய்த் துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து தாசில்தார் பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளது. பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது இதனால் தாசில்தார் சங்கத்தினர் ரொம்ப சந்தோசமாக உள்ளனர்.
வருவாய்த் துறையில் கடந்த அ.தி.மு.க., ஆட்சி செய்யாததை தற்போதைய தி.மு.க., ஆட்சி நிறைவேற்றி உள்ளது. ஆண்டாள் கோயிலில் யானைகள், கொடி மரங்கள் காணாமல் போனது குறித்து விரைவில் நேரடி ஆய்வு செய்வோம், என்றார்.