/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழ்ப்புத்தாண்டு: மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
தமிழ்ப்புத்தாண்டு: மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ்ப்புத்தாண்டு: மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ்ப்புத்தாண்டு: மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 15, 2025 05:18 AM

சாத்துார்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட கோயில்களில் மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன், வெயிலு கந்தம்மன் கோயில், சொக்கர் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில், வெங்கடாஜலபதி கோயில், அனுமன் கோயில், சோமசுந்தரேஸ்வரர் கோயில், சக்தி விநாயகர் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் ,காளியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சாத்துார் விஸ்வநாதர் கோயில் ,மேல சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில், பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயில், நள்ளிசிங்கமடை அய்யனார் கோயில், நென்மேனி கைலாசநாதர் கோயில், கோட்டூர் குருசுவாமி கோயில், துலுக்கன்குறிச்சி வாழை மர பால சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் அதிகாலை 6:00 மணிக்கே நடை திறந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
புத்தாண்டை தொடர்ந்து சாத்துார், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.