/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தாமிரபரணி குடிநீர்
/
உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தாமிரபரணி குடிநீர்
ADDED : டிச 20, 2024 02:28 AM

காரியாபட்டி: காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி வருவதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
காரியாபட்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குழாய் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டு வருகிறது. அதுபோன்ற இடங்களில் புழு, பூச்சிகள், கழிவு நீர் செல்ல வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வக்கணாங்குண்டு தனியார் மில் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. இதனை பணியாளர்கள் சரி செய்தனர். சரிவர தரமாக சரி செய்யாததால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு 2 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.
அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் சப்ளை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.