/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
21.46 லட்சம் இலவச சேலைகள் பொங்கலுக்கு வழங்க இலக்கு: நவம்பரில் பணிகளை முடிக்க திட்டம்

ADDED : ஜூலை 22, 2025 12:36 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களுக்கு பொங்கல் 2026 திட்டத்தில் 21.46 லட்சம் பெடல்தறி சேலைகளும், 30 ஆயிரம் கைத்தறி சேலைகளும் நெய்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை நவம்பரில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், சேத்துார், புனல்வேலி பகுதிகளில் 28 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களுக்கு வேட்டி சேலை வழங்கும் பொங்கல் 2026 திட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 950 சேலைகள், நடப்பு திட்டத்தில் ஜூன் முதல் 15 லட்சத்து 8 ஆயிரத்து 271 சேலைகள் என மொத்தம் 21 லட்சத்து 46 ஆயிரத்து 221 பெடல் தறி சேலைகள் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மேலும் முன் உற்பத்தி திட்டம், நடப்பு திட்டத்தில் 30 ஆயிரத்து 515 கைத்தறி சேலைகள் நெய்து உற்பத்தி செய்வதற்கான பணிகளும் நடக்கிறது. இந்த பணிகள் அனைத்தையும் நவம்பரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 143 கைத்தறிகள், 4253 பெடல்தறிகளுக்கு தொடர் பணி வழங்கப்பட்டுள்ளது. இங்கு நெய்து முடிக்கப்படும் சேலைகள் மாநிலம் முழுதும் அனுப்பப்பட்டு 2026 பொங்கலுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.