ADDED : ஜன 30, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சி.ஐ.டி.யூ டாக்ஸி வேன் சங்க ஆண்டு பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு வர்த்தக சங்கத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார் . சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் மகாலட்சுமி துவக்கினார். மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பேசினர். தலைவராக விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றனர். புது பஸ் ஸ்டாண்ட் சாலை சீரமைக்க வேண்டும், சங்கரன்கோவில் முக்கு வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.