ADDED : நவ 02, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: கீழ ராஜகுலராமன் அருகே வி.புதுாரை சேர்ந்த கந்தசாமி மனைவி கனகவல்லி 45, இவர் ராஜபாளையத்தில் தனியார் பள்ளி ஆசிரியர். தினமும் பள்ளி அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து ஊருக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை 5:00 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தண்டவளத்தை கடந்த போது குருவாயூரிலிருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரிக் கின்றனர்.

