/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2.75 கி. மீ., ஆக்கிரமிப்பு நீர் வரத்து பாதை மீட்பு: ஓடையில் பாய்ந்த மழை நீர்

ADDED : நவ 02, 2025 03:43 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மாவூற்று மலைப்பகுதியில் இருந்து வண்ணான் குளம் கண்மாய் வழியாக கடை பிள்ளையார்குளம் கண்மாய்க்கு செல்லும், 50 மீட்டர் அகலம் கொண்ட 2.75 கிலோமீட்டர் துார அரசு புறம்போக்கு நீர் வரத்து ஓடை மீட்கப்பட்ட நிலையில் அதன் வழியாக மழை நீர் சென்றது.
இந்தக் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால், மழைக்காலங்களில் மழை நீர் வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் குறைதீர் நாளில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து இப்பிரச்னையில் கலெக்டர் சுகபுத்ரா நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வத்திராயிருப்பு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆக்கிமிரப்பு அகற்றப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையில் தண்ணீர் கண்மாய்க்கு நீர்வரத்து ஓடையில் பாய்ந்து சென்றது.
இதனை கலெக்டர் சிவபுத்திரா நேற்று பார்வையிட்டார்.மேலும் கோட்டையூர் தெற்கு தெருவில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பயனாளிகளின் இல்லம் தேடி - பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.