/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்தில் ஆசிரியை பலி: மகன் காயம்
/
விபத்தில் ஆசிரியை பலி: மகன் காயம்
ADDED : மே 03, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஜோகில்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தன் மனைவி ரோகிணி, 51, இவர் மந்திரி ஓடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். நேற்று மதியம் 2:30 மணிக்கு தனது மகன் லட்சுமண பெருமாள், 19, உடன் பைக்கில் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
ராமானுஜபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். இதில் ஆசிரியை ரோகிணி இறந்தார்.
மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.