/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆசிரியர் திறன் மேம்பாட்டு கூட்டம்
/
ஆசிரியர் திறன் மேம்பாட்டு கூட்டம்
ADDED : டிச 06, 2024 04:58 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் அகத்தர உறுதிப்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் ஓர் அற்புதக்கலை என்ற தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கூட்டம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியத்தாய் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் திலகவதி, செயலாளர் அருணா முன்னிலை வகித்தனர். அகத்தர உறுதிப்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் தேவி வரவேற்றார். மதுரை டாப் கிட்ஸ் ஆலோசனை மையம் நிர்வாக இயக்குனர் டாக்டர் போஜராஜ் பேசினார்.
கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சத்யா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அகத்தர உறுதிப்பாட்டு மையம் துணை ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரியா நன்றி கூறினார். 166 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.