ADDED : நவ 22, 2024 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தஞ்சாவூரில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கோரியும் டிட்டோ ஜாக், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர்விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர்குணசேகரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகர்ராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் முத்தையா பேசினர்.