ADDED : பிப் 02, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ராஜபாளையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
.வட்டார தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வட்டார பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.