/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆசிரியர் சங்க தலைவர்கள் பிரகாஷ், ராஜசேகர், சிவக்குமார், சங்கரலிங்கம், பழனிவேல் ராஜன் தலைமை வகித்தனர்.
ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சங்கர்கணேஷ், ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி, வட்டார செயலாளர்கள் ஜெய்சங்கர், உத்தண்ட சீனிவாசன், அய்யனார் பேசினர். ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொருளாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.