/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
விருதுநகரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2024 04:16 AM

விருதுநகர்: மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தை ஆய்வு செய்யும் போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விச்சூழல், ஆசிரியர்களின் கற்பித்தல் சூழலை பற்றி அறியாமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை விருப்ப ஓய்வில் செல்லக்கூறிய கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செல்வகணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் முத்தையா, மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன், பல்வேறு சங்கங்களை சேர்ந்த பாலமுருகன், ராஜேஷ், தங்கம்மாள், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.