ADDED : செப் 23, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: திருப்பூர் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வாஞ்சி நாதன், மாநில அமைப்புச் செயலாளர் முத்தையா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.
மகளிர் ஒருங்கிணைப்பாளர் கேத்தரின் கன்னிகா நன்றிக்கூறினார்.
