UPDATED : செப் 26, 2026 04:28 PM
ADDED : செப் 26, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். மாணவர் மாதவன் வரவேற்றார். மதுரை அண்ணா பல்கலை கழக மண்டல தலைவர் லிங்கதுரை பேசினார். நிகழ்ச்சிகளை முத்துக்குமார், உதவி பேராசிரியை ஆனந்தி தொகுத்து வழங்கினர். 13 கல்லூரிகளைச் சேர்ந்த 116 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய படைப்புகளை சமர்ப்பித்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி ரிசோனி நன்றி கூறினார்.
----
