ADDED : நவ 28, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: விருதுநகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் 25. தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை 3:30 மணிக்கு வாடிக்கையாளரை சந்தித்து விட்டு உடன் பணி புரிந்த மணிமாறனுடன் 28, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வீடு திரும்பினார்.
வில்லிபத்திரி அருகே வந்த போது எதிரே கல்குறிச்சியை சேர்ந்த டிரைவர் திருக்குமரன் 52, ஓட்டி வந்த லாரி மோதியதில் சரவணகுமார் சம்பவ இடத்திலே பலியானார்.
மணிமாறன் லேசான காயத்துடன் தப்பினார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.