ADDED : ஆக 27, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஆக. 28 -
விருதுநகர் அருகே மீசலுார் விலக்கில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் 17வது வருஷாபிஷேகம் நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, சுதர்சனம், லெட்சுமி, மகா விஷ்ணு பூஜையுடன் துவங்கியது. காலை 10:45 மணிக்கு மேல் துவாரகமாயி, கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டு தீபாராதனை, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.
