ADDED : ஆக 24, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஆக. 25 –
விருதுநகர் என்.ஜி.ஓ., வழிவிடு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமத்துடன் துவங்கி நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ-பூஜை நடந்தது. அன்று மாலை 6:00 மணிக்கு மேல் சுமங்கலி பூஜை, கடம் எழுந்து அருளல் முதற்கால யாகசாலை பூஜை, யந்திரஸ்தானம், நவரத்னஸ்தாபனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:15 மணிக்கு மேல் 2வது யாகசாலை பூஜை துவங்கி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியின் அருளை பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் அன்று மாலை மீனாட்சி அய்யப்பன் குழுவினரின் பஜனை, மாலை 6:30 மணிக்கு கந்தன் கண்மணி தியாவின் பக்தி இன்னிசை நடந்தது.
