ADDED : ஆக 24, 2026 06:12 PM
அருப்புக்கோட்டை, ஆக. 25-
அருப்புக்கோட்டை அருகே காந்தி நகர் பகுதி பூபால் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 21, இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டில் பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு, அருகில் தான் குடியிருக்கும் வீட்டிற்கு சென்று விட்டார். இவரது தாய் சிங்கம் மாள் காலையில் அங்கு சென்று பார்த்த போது கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், 33, இவருடைய மனைவி மகாலட்சுமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று தனது தாய் , மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தர மறுத்த நிலையில், அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
___
