/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் செயல் அலுவலர் வி.ஏ.ஓ. மீது வழக்கு
/
கோயில் செயல் அலுவலர் வி.ஏ.ஓ. மீது வழக்கு
ADDED : மார் 08, 2024 12:30 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசுவைத்தான் பட்டியில் நிலப் பிரச்சனை தொடர்பாக வைத்தியநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் ஜவகருக்கும், வி.ஏ.ஓ. வேலுராஜுக்கும் இடையே ஏற்பட்ட அடி,தடி மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக வி.ஏ.ஓ. வேல்ராஜுக்கும், வைத்தியநாத சுவாமி கோயில் நிர்வாகத்திற்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் ஒரு போர்டினை வேல்ராஜ் வைத்துள்ளார். இதனைக் கோயில் செயல் அலுவலர் ஜவகர் அப்புறப்படுத்தியபோது இருவரும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த வேல்ராஜ் கொடுத்த புகாரில் செயல் அலுவலர் ஜவகர், கோயில் ஊழியர் குமரேசன் ஆகியோர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளிலும்,தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக செயல் அலுவலர் ஜவகர் கொடுத்த புகாரில் வி. ஏ. ஓ. வேல்ராஜ் மீது 3 பிரிவுகளிலும் வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

