/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வந்தது கோயில் ஹைமாஸ் விளக்கு
/
செயல்பாட்டிற்கு வந்தது கோயில் ஹைமாஸ் விளக்கு
ADDED : செப் 22, 2025 03:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் முன்புள்ள ஹைமாஸ் விளக்கு மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.
இக்கோயில் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த விளக்கு சில நாட்களாக செயல்படவில்லை. கோயில் முன்பு இருண்டு கிடக்கும் சூழல் காணப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியது.
நகராட்சித் தலைவர் ரவிக்கண்ணன் உடனடியாக மின் விளக்கினை சீரமைக்க நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து சீரமைக்கப்பட்டது. மின்விளக்கு செயல்பட்டு வருவதால் கோயில் முன்பு வெளிச்சமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.