/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோவில் நிலம் கொள்ளை:நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
/
கோவில் நிலம் கொள்ளை:நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 01:26 AM
சிவகாசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணபேரியில், ஜக்கம்மா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை ஜக்கம்மா அறக்கட்டளை என்ற பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதன் மீதான வழக்கு, 2019ல் இருந்து நிலுவையில் உள்ளது.
இதில், பட்டாவை ரத்து செய்து, மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அறநிலையத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேடாக பட்டா தருவதற்கு துணை போன அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்கள், இடங்கள் குறித்து அனைத்து விபரங்களும் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய எடுத்து வரும் முயற்சி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து முழுமையான விசாரணைக்கு தனி கோர்ட் அமைக்க வேண்டும்.
காடேஸ்வரா சுப்பிரமணியம்,
தலைவர், ஹிந்து முன்னணி

