/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளமாக மாறிய தற்காலிக பஸ் ஸ்டாண்ட்
/
பள்ளமாக மாறிய தற்காலிக பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஏப் 24, 2025 06:33 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்ட் குண்டும், குழியுமாக எந்தவித வசதிகளில் இன்றி இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை -மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் நவீன பஸ் ஸ்டாண்டாக மாற்றுவதற்காக இடித்து கட்டப்பட்டுள்ள 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்காலிக இதற்கு எதிரே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
பேருக்குத்தான் இது பஸ் ஸ்டாண்டாக உள்ளதுஇதில் பயணிகளுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பஸ் ஸ்டாண்ட் பள்ளமாக இருப்பதால் பஸ்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றன. மழைக்காலமானால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது.
குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பல மணி நேரம் வெயிலிலும் மழையிலும் நின்று கொண்டு பஸ் ஏற வேண்டிய நிலையில் உள்ளது. வசதிகள் இல்லாததால் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் ரோட்டிலேயே நின்று பயணிகள் ஏறி செல்கின்றனர்.
புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளும் ஆமை வேகத்தில் நடப்பதாலும், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இல்லாததாலும்கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர்.