/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த பாப்பாங்குளம் கண்மாய்
/
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த பாப்பாங்குளம் கண்மாய்
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த பாப்பாங்குளம் கண்மாய்
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த பாப்பாங்குளம் கண்மாய்
ADDED : ஜன 02, 2024 04:46 AM

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே பாப்பாங்குளம் கண்மாய் பத்தாண்டுகளுக்கு பிறகு நிறைந்தும், ஷட்டர் பழுது, பராமரிப்பு இல்லாத மறுகால் ஓடை, பலமிழந்த கரை ஆகியவற்றால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
அருப்புக்கோட்டை செம்பட்டி அருகே பாப்பாங்குளம் கண்மாய் உள்ளது. ஒரு காலத்தில் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வந்த கண்மாய் பராமரிப்பு செய்யாமல் விட்டதால் தண்ணீர் வரத்து குறைந்து போனது. கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடை மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை அமைக்க அருகில் இருந்த ஓடைகள் சேதம் அடைந்து கண்மாய்க்கு தண்ணீர் வர முடியாமல் போனது.
தண்ணீர் வரும் ஓடைகளும் பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டனர். தற்போது பெய்த தொடர் கனமழையில் கண்மாயில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்து மறுகால் ஓடை வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக செல்கிறது. மறுகால் ஓடை தூர் வாரப்படாததால் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள விளைநிலங்களில் தேங்கி கிடக்கிறது.
அருப்புக்கோட்டையிலிருந்து காந்திநகர் சர்வீஸ் ரோட்டிலிருந்து செம்பட்டி செல்லும் ரோட்டில் கண்மாய் நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்மாயை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

