/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமேனி நாதர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
/
திருமேனி நாதர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
ADDED : பிப் 04, 2025 04:54 AM

திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்சுழியில் நூற்றாண்டு புகழ்வாய்ந்த திருமேனி நாதர் கோயில் உள்ளது. இதில் நேற்று தைப்பூச விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் முருகன் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதை அடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 3 முதல் 15 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் காலை, மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 15 செவ்வாய் அன்று தைப்பூசம் விமர்சையாக நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

