/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமிரபரணி குடிநீர் கசிவு ஒரு அடி பள்ளமான ரோடு
/
தாமிரபரணி குடிநீர் கசிவு ஒரு அடி பள்ளமான ரோடு
ADDED : ஆக 18, 2025 02:58 AM

தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே மெயின் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் குழாய் கசிவால் ஒரு அடி வரை ஆழம் பள்ளம் ஏற் பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் இருந்து தளவாய்புரம் செல்லும் வழியில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி உள்ளது. இதன் மெயின் தெருவான காளியம்மன் கோயில் தெருவில் தாமிரபரணி குடிநீர் சப்ளைக்கான குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் புதிய ரோடு பணி என இதன் மேலேயே பேவர் பிளாக் கற்கள் பதித்து பணி முடித்தனர்.
இக்குழாயிலிருந்து அடிக்கடி உடைப்பெடுத்து குடிநீர் கசிந்து வீணாவதுடன் வாகனங்கள் சென்று வருவதால் ரோடு தாழ்ந்து மேடு பள்ளமாக மாறுவதும் தொடர்கதை ஆகிறது. தற்போது தளவாய்புரம் மெயின் ரோட்டில் இருந்து உள் நுழையும் பகுதி அருகே உள்ள கசிவில் ஏற்பட்ட பள்ளம் ஒரு அடி வரை குழியாக மாறிவிட்டது.
ராமசுப்பு: மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பெடுப்பது சரி செய்வது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் ஒரே இடத்தில் கசிவு இருந்து கொண்டே வருவதை சரி செய்யவில்லை.
அதில் கனரக வாகனங்கள் முதல் அனைத்தும் சென்று வந்து ஒரு அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டு விட்டது. அதிகாரிகளிடம் தகவல் கூறினாலும் நடவடிக்கை இல்லை. நிரந்தர தீர்வு காண எதிர்பார்க்கிறோம்.