/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி குடிநீர் 'கட்'
/
அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி குடிநீர் 'கட்'
ADDED : டிச 15, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, கமிஷனர் ராஜமாணிக்கம் விடுத்துள்ள அறிக்கை : கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பம்பிங் நிறுத்தப்பட்டுள்ளது. கிடைக்கும் குடிநீரை கொண்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகவும், காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.