/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி, நரிக்குடியில் தாயுமானவர் திட்டம்
/
திருச்சுழி, நரிக்குடியில் தாயுமானவர் திட்டம்
ADDED : ஆக 02, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50 சதவீத மானியத்தில் ஊட்டச் சத்து பெற்று பயனடையலாம்.
ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 100 விவசாயிகள் வீதம் 2 ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இதன் மூலம் கறவை பசுக்களின் பால் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
பயன்பெற விரும்பும் பயனாளி சொந்த பசு வைத்திருக்க வேண்டும். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும், என்றார்.

