நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி முடங்கி தெருவை சேர்ந்தவர் வீராசாமி. கூலி தொழிலாளி. இவரது மகன் கோடீஸ்வரன் 5, நேற்று காலை 10:00 மணிக்கு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது வாயில் நுரை தள்ளி விழுந்துள்ளார்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனையில் சிறுவன் கோடீஸ்வரன் உயிரிழந்தது தெரிய வந்தது. கூமாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.