/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெடுஞ்சாலைத் துறை திட்ட மதிப்பீடுகளை உத்தரவு இருந்தும் தமிழில் வழங்காதது ஏன் பட்டய பொறியாளர் சங்கம் கேள்வி

ADDED : அக் 04, 2025 02:23 AM
விருதுநகர்:தமிழகத்தில்நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் சாலை, பாலம் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை தமிழ் வழியில் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை தமிழக அரசு இன்று வரை ஏன் அமல்படுத்தாமல் உள்ளது என நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பாலங்கள், ரோடுகளுக்கான திட்டமதிப்பீடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன. இந்த திட்ட மதிப்பீட்டில் பொறியாளர்கள், இந்த ரோடு போட என்ன தேவை உள்ளது, எதற்காக இந்த இடத்தில் பாலம் வர வேண்டும் என்ற அறிக்கை, அதன் தொடர்ச்சியாக அளவீடுகள், கணக்கீடு விவரங்கள் இருக்கும். இதை தமிழில் எழுத அனுமதிப்பதில்லை என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழில் இருந்தால் ஆர்.டி.ஐ.,ல் பெறும் மக்கள் புரிந்துக் கொள்வதுடன், பணிகளில் வெளிப்படை தன்மை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் தயாரிக்கப்படும் திட்ட மதிப்பீடுகள் தமிழ் வழியில் வழங்க உத்தரவிட, நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தினர் கோரினர். இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2023ல் அரசு சார்பு செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதம் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் சங்கம் நீதிமன்றத்தை நாடி, பொறியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை பெற்றது. இதற்கும் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சங்க மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. விரைந்து செயல்படுத்த வேண்டும், என்றார்.