/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் மரக்கடை காகித நிறுவனத்தில் தீ
/
சிவகாசியில் மரக்கடை காகித நிறுவனத்தில் தீ
ADDED : அக் 04, 2025 02:26 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை அருகே உள்ள மர பட்டறையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து, அருகே உள்ள காகித பேக்கேஜிங் நிறுவனத்திற்கும் பரவியதில் பொருட்கள் கருகின.
கண்மாய் கரை பகுதியில் கணபதி மரப்பட்டறையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அருகே இருந்த காகித, பேக்கேஜிங் நிறுவனத்திற்கும் தீ பரவியது.
இதில் நிறுவனத்தில் இருந்த காகித பண்டல்கள், பேக்கேஜிங் அட்டைகளில் கருகின. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணி நடந்தது. பேக்கேஜிங் நிறுவனத்திற்குள் வீரர்கள் செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
4 மணி நேர போராட்டத்திற்கு பின் காலை 5:00 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. மரப்பலகைகள், காகிதப் பொருட்கள், இயந்திரங்கள் தீயில் கருகின.