/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி இரண்டு பேர் காயம்
/
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி இரண்டு பேர் காயம்
ADDED : அக் 04, 2025 02:27 AM

காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த தங்கமணி 19, கனகவேல் 19, அச்சம்பட்டி கருப்பையா 26, இவர்கள் பாலா என்பவரது கடையில் வெல்டராக வேலை செய்தனர். நேற்று காலை அச்சம்பட்டியில் ஒரு வீட்டு மாடியில் தகர செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழிருந்து மாடிக்கு இரும்பு பைப்புகளை மேலே ஏற்றினர். வீடு அருகே உள்ள உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு பைப்புகள் பட்டதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் தங்கமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்ற இருவரும், பலத்த காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.