/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கடை வைக்க அனுமதிக்கப்படாத பகுதிகள் எவை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

ADDED : செப் 25, 2025 04:14 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கு கடைகள் அமைக்கலாம், அமைக்கக்கூடாது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிவன் வடக்கு மாடவீதி , பழைய விருதுநகர் ரோடு, வேலாயுத ரோடு வடக்கு பகுதி, விளாம்பட்டி ரோடு, விஸ்வநத்தம் ரோடு மணிநகர் சந்திப்பு, வெம்பக்கோட்டை ரோடு, காமராஜரோடு நீர்த்தேக்க தொட்டி அருகே, சேரமன் சண்முகம் நாடார் ரோடு, சுக்கிரவார்பட்டி ரோடு முத்துமாரி நகர், செங்கமல நாச்சியார்புரம் ரோடு 52 வீட்டு காலனி, ஆலமரத்துப்பட்டி ரோடு பெரியார் வடக்கு ரத வீதி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகே ஸ்டாண்டர்டு காலனி ஆகிய இடங்களில் சாலை ஓரங்களில் வியாபாரிகள் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் கடைகள் வைத்துக் கொள்ளலாம்.
சிவன் சன்னதி தெரு, நான்கு ரத வீதிகள், என்.ஆர்.கே.ராஜரத்தினம் ரோடு, செங்கமல நாச்சியார்புரம் ரோடு, ஆலமரத்துப்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு ரயில்வே கேட் அருகே ஆகிய இடங்களில் கடைகள் வைக்கக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. கடை வைக்க அனுமதி பெற்ற இடங்களுக்கு வியாபாரிகள் மாநகராட்சியில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் போலீசார், சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், வணிகர்கள் சங்கத்தினர், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கமிஷனர் கூறுகையில், மாநகராட்சியில் பொதுவாகவே இட நெருக்கடியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து பாதிக்காத வகையில் சாலையோர வியாபாரிகள் எங்கு கடை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகள் வைக்க வேண்டும், என்றார்.