/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொப்பரை கொள்முதல் இலக்கு 359 மெ.டன்
/
கொப்பரை கொள்முதல் இலக்கு 359 மெ.டன்
ADDED : அக் 16, 2024 04:19 AM
விருதுநகர் : விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் தென்னை விவசாயிகளிடம் இருந்து நியாயமான சராசரி தரத்திற்கு கிலோவிற்கு ரூ. 111.60 என்ற குறைந்த பட்ச ஆதார விலையில் மத்திய அரசு நிறுவனம் மூலம் இரண்டாம் கட்டமாக கொள்முதல் செய்யப்படவுள்ளது. ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 359 மெ.டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செப். 10 முதல் டிச. 8 வரை செயல்படும்.
இதில் விவசாயிகளின் வங்கி கணக்கில் கொள்முதல் தொகை வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் 82484 05989, 04563 - 222615, மேற்பார்வையாளர்கள் 70102 80754, 97903 87588 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.