/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டிய இரண்டே நாளில் இடிந்து விழுந்த வாறுகால்
/
கட்டிய இரண்டே நாளில் இடிந்து விழுந்த வாறுகால்
ADDED : டிச 03, 2024 05:21 AM

காரியாபட்டி: மல்லாங்கிணரில் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கட்டிய இரண்டே நாளில் வாறுகால் இடிந்து விழுந்தது.
மல்லாங்கிணர் பேரூராட்சிகளில் வாறுகால் கட்டும் பணி நடக்கிறது. இதை அதிகாரிகள் சரிவர கவனிப்பதில்லை. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் கல்குறிச்சி - விருதுநகர் ரோட்டில் மேல்நிலைப்பள்ளி அருகே கட்டப்பட்ட வாறுகால் சுவர் இரண்டே நாளில் இடிந்து விழுந்தது.
பாண்டியன், கூறியதாவது, கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தவித்து வந்தோம். பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் ரூ. பலகோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாறுகால் கட்டும் பணி நடக்கிறது. லேசான மழைக்கே வாறுகால் சுவர் இடிந்து விழுந்தது அதிர்ச்சியாக உள்ளது. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இனியாவது தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.