/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதே மான்களின் பெருக்கத்திற்கு காரணம்
/
புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதே மான்களின் பெருக்கத்திற்கு காரணம்
புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதே மான்களின் பெருக்கத்திற்கு காரணம்
புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதே மான்களின் பெருக்கத்திற்கு காரணம்
ADDED : ஜன 22, 2025 06:26 AM
ராஜபாளையம் : புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவது மான்கள் பெருக்கத்திற்கு காரணம் என விழிப்புணர்வு கலை பயண துவக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
ராஜபாளையம் வனத்துறை நீலகிரி வரையாடு திட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன் வரவேற்றார்.
கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், விவசாயிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பிரசனைகள் ஏற்படுகிறது. மயில்கள்,காட்டு பன்றிகள், மான்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நகர் பகுதியில் நாய்களின் தொல்லைகளும் அதிகமாகிறது. மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் இயற்கை சமநிலை மாறி வருவது ஆகும். மான்கள் இனப்பெருக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருவதற்கு காரணம் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவது தான். புலிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அரசு, வனத்துறை சார்பில் இயற்றப்பட்டுள்ளது.
புலிகளின் எண்ணிக்கையில் கூடவில்லை. நீலகிரி வரையாடுகள் சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அழிந்து வரும் உயிரினமாகும். உலகம் முழுவதுமே இயற்கை பாதுகாக்க வேண்டியது அவசியம். இனி வரையாடுகள், புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் பேராசிரியர்கள், அலுவலர்கள் , மாணவர்கள் பங்கேற்றனர்.