/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி பகுதியில் சிதிலம் அடைந்த அன்ன சத்திரங்கள்
/
நரிக்குடி பகுதியில் சிதிலம் அடைந்த அன்ன சத்திரங்கள்
நரிக்குடி பகுதியில் சிதிலம் அடைந்த அன்ன சத்திரங்கள்
நரிக்குடி பகுதியில் சிதிலம் அடைந்த அன்ன சத்திரங்கள்
ADDED : செப் 27, 2025 11:15 PM

நரிக்குடி: நரிக்குடி, காரியாபட்டி பகுதியில் உள்ள அன்னச் சத்திரங்கள், மடங்கள், கோயில்கள் சிதலமடைந்து, முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன. வரலாற்று சின்னங்களை பாதுகாக்க புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ராணி மங்கம்மாள் காலத்தில் அன்னச்சத்திரங்கள், வழிப்போக்கர்கள் மடங்கள், கோயில்கள் கட்டப்பட்டன. போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது அன்னச்சத்திரங்கள், மடங்கள், கோயில்கள் சரிவர பராமரிக்கப்படாமல் கேட்பாரற்று போனது. நரிக்குடி மறையூர், அழகிய நல்லூர், எஸ். தோப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த கட்டடங்கள் சிதிலமடைந்து, முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.
அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், சிலைகள் காணாமல் போயின. இதனை கண்டும் காணாமல் அப்படியே விட்டு விட்டதால் பல வரலாற்று சின்னங்கள் மறைந்து போகும் சூழ்நிலை உள்ளது. மறையூரில் உள்ள அன்னச்சத்திரம் புரைமைத்து, புராதான சின்னமாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தற்போது அங்கிருக்கும் முண்டு கற்கள், தூண்கள் காணாமல் போகும் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. வரலாற்று நிகழ்வுகளை பாதுகாக்க புரைமைப்பு பணிகளை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.