/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனைக்காக 22.5 ஏக்கரை வழங்கியது மாவட்ட நிர்வாகம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி துவங்க நடவடிக்கை

ADDED : ஆக 26, 2025 03:17 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, முதுநிலை மருத்துவத்திற்கான கட்டடங்கள் அமைப்பதற்காக அரசு மருத்துவக்கல்லுாரி அருகே உள்ள 22.5 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இதில் 500 படுக்கைகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்கப்படவுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் 640 படுக்கைகளுடன் திறக்கப்பட்டு நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி வெளியோயாளிகளாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதனால் கூடுதலாக விபத்து, அவசர சிகிச்சை பிரிவு நான்கு வழிச்சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி அருகே துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது அரசு மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
தற்போது முதுநிலை மருத்துவத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் விரைவில் மருத்துவப்படிப்புகள் துவங்கப்படவுள்ளது. இதனால் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஆண், பெண் விடுதிகள், ஆய்வகங்கள் உள்பட பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்திற்கு அருகே 22.5 ஏக்கர் நிலத்தை புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த இடத்தில் 500 படுக்கைகளுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையின் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரைவில் துவங்கப் படவுள்ளது.