/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் கல்விப்பயணம்
/
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் கல்விப்பயணம்
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் கல்விப்பயணம்
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் கல்விப்பயணம்
ADDED : அக் 01, 2025 07:24 AM
மானேஜிங் போர்டு செயலாளர் மதன் கூறியதாவது;
பெண்களின் கல்விக்காக பாரம்பரியத்தை காக்கும் கலைக்கூடமாக, உயர் நோக்கங்களை அடித்தளமாக கொண்டு 63 ஆண்டுகளாக அரியதோர் சேவையாற்றி, விருதை மண்ணில் ஒளிரும் கல்லுாரியாம் நமது வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி.
வைர விழா கண்ட எமது கல்லாரி உழைப்பாலும், திறமையாலும், தென் தமிழகத்தில் பெண்களுக்கான தனித்துவமிக்க சிறந்த கல்லுாரியாக திகழ்கிறது.இளங்கலை பட்டப்படிப்புகள் 25, முதுகலை பட்டப்படிப்புகள் 13, டாக்டர் பட்டப்படிப்பு 6, உடனடி வேலை வாய்ப்புக்கான சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள் கொண்டு சேவை மனப்பான்மையுடன் இயங்குகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி (ஏ.ஐ.சி.டி.இ.,) ஒப்புதலுடன் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாடப்பிரிவுகளும் உள்ளது. 2009 - 2010ம் கல்வியாண்டு முதல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்று செயல்படுகிறது.
தேசிய தர நிர்ணய குழுவினரால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு ஏ++' பெற்றுள்ளது. கல்லுாரியில் கணினிமயமாக்கப்பட்ட நுாலக வசதியும் உள்ளது. மேலும் கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு, கலை துறைகளில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
கல்லுாரி உயர்ந்த ஆராய்ச்சி மையங்கள், உயர் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதால் மாணவிகளுக்கு தொழில்துறை அனுபவம், பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களின் தகுதிகளை வளர்க்கின்றோம். கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி 2037 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. மனநல மிக்க வாழ்வியல் மேம்பாட்டிற்காக நெறிமுறைகள் போதிக்கப்படுவதுடன் கருத்துப் பரிமாற்ற வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. கல்லுாரி விடுதியில் அடிப்படை தேவைகள், கட்டிலுடன் கூடிய அறைகள், குடிப்பதற்கு வெந்நீர் வசதி, சலவை வசதி என அனைத்தும் கல்லுாரி நிர்வாகம் முனைப்போடு செய்கிறது.
பண்பு, ஒளி, உயர்வு என்னும் தாரக மந்திரத்தில் உறுதிக்கொண்டு வெறும் கல்வி நிலையமாக இல்லாமல் மாணவர்களின் கனவுகளை நனவாக மாற்றும் அற்புத தளமாக உள்ளது. மேலும் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி மானேஜிங் போர்டு நிர்வாகத்தின் பெயரில் 2010 - 2011ம் கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி., நர்சிங் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, என்றார்.