/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அழிந்து வரும் வைப்பாறு... கருவேலம் காடாக மாறும் அவலம் நதியை மீட்க வலியுறுத்தல்
/
அழிந்து வரும் வைப்பாறு... கருவேலம் காடாக மாறும் அவலம் நதியை மீட்க வலியுறுத்தல்
அழிந்து வரும் வைப்பாறு... கருவேலம் காடாக மாறும் அவலம் நதியை மீட்க வலியுறுத்தல்
அழிந்து வரும் வைப்பாறு... கருவேலம் காடாக மாறும் அவலம் நதியை மீட்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 12, 2025 05:56 AM

சாத்துார் : சாத்துார் வைப்பாறு முள்வேலி காடாக மாறி அழிந்து வரும் நிலையில் பல கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள நதியை மீட்டு தர வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாறு மணல் நிறைந்த பகுதியாக இருந்தது.
சாத்துார் படந்தால் சங்கர நத்தம் இரவார்பட்டி சூரங்குடி வடமலாபுரம் ரெங்கப்பநாயக்கன்பட்டி என பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
இந்நிலையில் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டுத்தனமாக அள்ளப்பட்டதால் ஆற்றில் இருந்த மணல் பரப்பு குறைந்து ஆறு கட்டாந்தரையாக மாறியது.
இவற்றில் முளைத்திருந்த புல்வெளியை மேய்வதற்காக ஆடுகள் ஆற்றுக்குள் இறங்கிய போது அவை இட்ட எச்சம் காரணமாக முள் செடிகள் முளைக்கத் தொடங்கின.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த முள் செடி தற்போது மொத்தமாக வளர்ந்து காடு போல ஆறு மாறி விட்டது.
காலப்போக்கில் படந்தால், மருதுபாண்டி நகர் வசந்தம் நகர் குருலிங்கபுரம், மேலக் காந்திநகர், பெரியார் நகர், கீழ காந்திநகர், புதுப்பாளையம், அமீர் பாளையம்நகர்கள் உருவாகி இந்த நகர்களில் இருந்து வெளியாகும் கழிவுநீர் முழுவதும் ஆற்றில் கலக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக ஆற்று நீர் மாசு அடைந்து ஆற்றில் போடப்பட்டிருந்த உரை கிணறுகள் செயலிழந்து போயின.போதுமான குடிநீர் கிடைக்காத நிலையில் கழிவு நீர் கலந்ததால் சுகாதாரமற்ற நிலையில் இருந்த உறவினர்கள் மூடப்பட்டது.
தற்போது சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.வைப்பாற்று கரையில் இருந்த போதும் பல கிராமங்கள் அந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாத்துார் பகுதி தொழிலதிபர்கள் இரு முறை தங்கள் சொந்த பணத்தில் ஆற்றை சீரமைத்த போதும் மீண்டும் ஆறு பாழடைந்து வருகிறது.இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாழா ன வை ப்பாறு
கார்த்திக், சமூக ஆர்வலர்: ஆற்றுத் தண்ணீர் முழுவதும் கழிவு நீர் கலந்து மாசு அடைந்து விட்டதால் தற்போது குளிக்கவும், குடிக்கவும் கூட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கோடை காலத்தில் ஆற்றில் ஊற்று தோண்டி பெண்கள் வீட்டிற்கு பானை, குடங்களில் தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
தற்போது ஆற்றுக்குள் நுழைய முடியாத வகையில் துர்நாற்றம் வீசுவதால் பலரும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
குப்பை கிடங்காக ஆறு
அய்யப்பன், தலைவர். வைப்பாறு நீர் நிலை மீட்பு இயக்கம்: வீட்டில் பயன்படுத்தப்படாமல் உள்ள மெத்தை பாய் தலையணை உள்ளிட்ட பொருட்களை ஆற்றில் தண்ணீர் செல்லும் போது வீசி விடுகின்றனர்.
இவை கரை ஒதுங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது. பயன்படுத்தி கிழிந்து போன ஆடைகளையும் சிலர் ஆற்றில் விடுகின்றனர் இதையும் தவிர்க்க வேண்டும்.
ஆறு புனிதமாக போற்றப்பட வேண்டிய ஒன்று. தற்போது குப்பை கிடங்காக மாறிவிட்டது வேதனை தருகிறது.