ADDED : அக் 14, 2024 09:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோயிலில் சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபால சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி ஊர்வலம் ஆக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து தெப்பக்குளம் சென்று அங்கு அம்பு விடப்பட்டது.
விடப்பட்ட அம்புகளை மக்கள் ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சியில் சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தார் செய்தனர்.