/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆப்பரேஷனுக்கு பின் மாணவி மரணம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
/
ஆப்பரேஷனுக்கு பின் மாணவி மரணம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
ஆப்பரேஷனுக்கு பின் மாணவி மரணம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
ஆப்பரேஷனுக்கு பின் மாணவி மரணம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
ADDED : அக் 16, 2024 04:18 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்த பிறகு மாணவி இறந்ததில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியை சேர்ந்த மர வியாபாரி ஜெயக்குமார், 49. இவரது மனைவி உமாசங்கரி 45. சாத்துாரில் போஸ்ட் மாஸ்டராக உள்ளார்.
இவர்களது 17 வயது மகள் அருப்புக்கோட்டை தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு வலது பக்கம் கழுத்திற்கு கீழ் சிறிய கட்டி வந்துள்ளது.
இது பெரியதாகி கொண்டே வந்ததால் மதுரை ரோட்டில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர்.
அக். 12ல் மாலை 6:15 மணிக்கு சிறப்பு மருத்துவர் மூலம் மாணவிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இரவு 8:20 மணிக்கு மாணவி சீரியஸாக இருப்பதாகவும், நெஞ்சில் சளி இருப்பதால் மூச்சு விட முடியவில்லை என்றும் டாக்டர்கள் கூறினர்.
தொடர்ந்து ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ்சில் மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிசோதித்தபோது மாணவி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில் மகள் இறப்பிற்கு தவறான சிகிச்சையே காரணம் என்றும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.